சமூக நலன்
18வது முறையாக யாசகம் பெற்ற பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்த முதியவர்
- October 23, 2020
- jananesan
- : 1000
- யாசகப் பணம்

தூத்துக்குடியை சேர்ந்த பூல் பாண்டியன் என்ற முதியவர், யாசகமாக பெற்று வந்த நிதியில், தனது உணவு செலவு போக மீதியுள்ளவற்றை பள்ளிகளுக்கு உதவி வந்தார்.
தற்போது கொரோனா தொற்று ஆரம்பித்தவுடன், தன்னிடம் மக்கள் யாசகமாக வழங்கி வரும் பணத்தை மதுரை கலெக்டர் அதுவலகத்தில் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே 17 முறை ரூ. ஒரு லட்சத்து 70 ஆயிரம் வழங்கி உள்ளார். இந்த நிலையில் 18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரைமாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார். இதனை பொது மக்கள் பாராட்டினர்.
Leave your comments here...