கண்மாய் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்..!

சமூக நலன்

கண்மாய் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்..!

கண்மாய் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்..!

மதுரை வடிவேல்கரை கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மயிலனேந்தல் கண்மாயை திருநகர் ரோட்டரி சங்கம் எடுத்து தூர்வாரி சுத்தம் செய்ய முன்வந்துள்ளது மேலும் வடிவேல்கரை கிராமத்தில் மூன்று முக்கிய இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் சுமார் 15 இலட்சம் மதிப்பில் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்கள் . திருநகர் ரோட்டரி சங்க தலைவர் வினோத் தலைமை தாங்கினார்.

வடிவேல்கரை கிராம நாட்டாமை ராமநாதன் கீழக்குயில்குடி கிராமத் தலைவர் காசி வடிவேல்கரை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா வடிவேல்கரை ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலேணேந்தல் கண்மாய் தூர்வாரும் பணியை கலெக்டர் வினய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ஆணைய ஆஷிக் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் தாசில்தார் தங்கப்பாண்டி ரோட்டரி சங்க செயலாளர் செந்தில் தாண்டவன் ரோட்டரி கவர்னர் ராஜாராமன் சங்கத்தின் திட்டத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் மீனா முன்னாள் நூலகர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave your comments here...