சோழவந்தானில் பேரிடர் மேலாண்மை நாள் விழா..!

சமூக நலன்

சோழவந்தானில் பேரிடர் மேலாண்மை நாள் விழா..!

சோழவந்தானில் பேரிடர் மேலாண்மை நாள் விழா..!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனையின்பேரில் மதுரை மாவட்ட கலெக்டர் மதுரை மாவட்ட தீயணைப்பு தடுப்பு அலுவலர் இவர்களுடைய பரிந்துரையின் பேரில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பாக பேரிடர் மேலாண்மை தினவிழா கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து வட வடகிழக்கு பருவ மழை வெள்ளத் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது இதில் வாடிப்பட்டி தாசில்தார் பழனிக்குமார் தலைமை தாங்கினார். விவேகானந்தா கல்லூரி வெங்கடேசன் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வரவேற்றார்.

சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து உட்பட தீயணைப்பு படை வீரர்கள் வெள்ளத்தின் முன்பு வெள்ளம் பாதித்த நிலையில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை குறித்து பயிற்சி விளக்கம் செய்து காண்பித்தனர். இடி ,மின்னல், சுனாமி காட்டுத்தீ ஆழ்துளைக்கிணறு புயல் மற்றும் சூறாவளி ஆகிய காலங்களில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை போன்றவை பயிற்சி செயல் முறை விளக்கம் நடந்தது.

இதில் வருவாய் ஆய்வாளர்கள் அழகு குமார், ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் சோலைமணி, சுரேஷ், முத்துராமலிங்கம் ,கார்த்திக் , முபாரக் விவேகானந்த கல்லூரி தேசிய படை அலுவலர் ராஜேந்திரன், காமாட்சி, செல்லப்பாண்டியன், செல்லத்துரை, குமரேசன், வீடியோ வெள்ளத் தடுப்புக் குறித்துப் பேசினார்கள். ஆலய பணியாளர்கள் பூபதி ,வசந்த், கவிதா ,கிராம உதவியாளர்கள் சின்னண்ணன், முருகன் உட்பட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சத்யநாராயணன் நன்றி கூறினார்

Leave your comments here...