இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘ருத்ரம்-1’ ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி:
- October 10, 2020
- jananesan
- : 831
- Rudram1
இந்தியா தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ருத்ரம்-1 என்ற ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
எதிரி நாடுகளின் ரேடார்கள், ஜாமர்கள், தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி அழிக்கும் வகையில் ‘ருத்ரம்-1’ என்ற ஏவுகணையை இந்தியாவின் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கி உள்ளது.
The New Generation Anti-Radiation Missile (Rudram-1) which is India’s first indigenous anti-radiation missile developed by @DRDO_India for Indian Air Force was tested successfully today at ITR,Balasore. Congratulations to DRDO & other stakeholders for this remarkable achievement.
— Rajnath Singh (@rajnathsingh) October 9, 2020
ஒலியை விட 2 மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை ஒடிசாவின் பாலாசோரில் நேற்று சோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்திய விமானப்படைக்கு பலத்தை அளிக்கும் இந்த ஏவுகணைகள், விமானப்படையில் இணைக்கப்படும்போது சுகோய் விமானத்தில் இருந்து ஏவும் வகையில் வடிவமைக்கப்படும் என தெரிகிறது.
வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கக்கூடிய அபியாஸ் ஏவுகணையை கடந்த மாதம் 23ம் தேதியும் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை கொண்ட அதிநவீன சவுரியா ஏவுகணையை கடந்த 3ம் தேதியும் இந்தியா வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. அந்த வரிசையில் எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் வல்லமை வாய்ந்த ருத்ரம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
Rudram 1 was successfully test-fired from a Sukhoi-30MKI fighter jet on Friday.
This is the huge step forward
Now @IAF_MCC able to perform operations into deep enemy territory to destroy their air defence.
Congratulations to @DRDO_India https://t.co/7Od8RcDx5j pic.twitter.com/crj7rBUuhj
— Vikrant Balasaheb Patil (@ivikrantpatil) October 9, 2020
ருத்ரம்-1 என்ற இந்த ஏவுகணை ஒடிசாவில் உள்ள பலசோர் கடற்கரையில் இருந்து சுகோய்-30 போர் விமானத்தின் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.‘ருத்ரம்-1’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததற்காக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
Leave your comments here...