கரும்பு சாகுபடி பகுதிகளை அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையிடம் ஒப்படைக்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழகம்

கரும்பு சாகுபடி பகுதிகளை அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையிடம் ஒப்படைக்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

கரும்பு சாகுபடி பகுதிகளை அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையிடம் ஒப்படைக்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

புதுக்கோட்டை மாவட்ட கரும்பு சாகுபடி பகுதிகளை தனியார் ஆலைக்கு மாற்றியத்தை ரத்துசெய்து பொதுத்துறையான தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு மாற்ற வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் குரூம்பூரில் இயங்கிவந்த இ.ஐ.டி. பாரி தனியார் சர்க்கரை ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இ.ஐ.டி பாரி ஆலை வசமிருந்த 42 பிர்க்காவும் ஏற்கனவே அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை வசம் இருந்தவை. 1997-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஈஐடி சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டபோது அந்தப்பகுதிகள் ஒப்படைக்கப்பட்டன.

தற்பொழுது இஐடி பாரி ஆலை மூடப்பட்ட நிலையில் அதை மீண்டும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையிடமே ஒப்படைப்பதே முறையான நடவடிக்கை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மட்ட செயலாளர் எஸ்.நாராயணசாமி தலைமை வகித்தார். ஈஐடி பாரி சர்க்கரை ஆலைமட்ட செயலாளர் எஸ்.பீமராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் பேசினார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சங்கத்தின் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Leave your comments here...