திமுக மூழ்கும் கப்பல்- ஹெச் ராஜா சாடல்.!

தமிழகம்

திமுக மூழ்கும் கப்பல்- ஹெச் ராஜா சாடல்.!

திமுக மூழ்கும் கப்பல்- ஹெச் ராஜா சாடல்.!

திமுக மூழ்கும் கப்பல். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று எச் ராஜா கூறியுள்ளார்.

மதுரை பாண்டிகோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் : “பாஜகவில் நவம்பர் மாதத்திற்கு உள்ளாக பூத் அளவில் கட்டமைக்க நடவடிக்கைகள், அதிமுகவின் சீட்டிங் எம்.எல்.ஏ வே திமுகவுக்கு ஆதரவாக இல்லை, திமுகவினர் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்து வருகின்றனர், திமுக கலகத்து கொண்டு உள்ளது, ஆடு ரெண்டு முட்டி கொண்டால் நரிகளுக்கு சந்தோஷம், அதிமுக தலைமை பிரச்சினைகளை சுமூகமாக பேசி முடித்து கையாண்டு உள்ளனர்.

முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துகள், திமுக மூழ்கும் கப்பலாக மாறி வருகிறது, 2021 -ல் திமுக ஆட்சி அமைக்க முடியாது, தமிழக தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை மட்டுமே அறிவிக்கும், ஒரு பிரச்சினையில் ஆளும் கட்சி நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தலாம்.
உ.பி யில் எதிர்கட்சிகள் அரசியல் நாடகம் ஆடும் யூக்தி” என கூறினார். பொன்.ராதாகிருஷ்ணணின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Leave your comments here...