சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை.!

அரசியல்தமிழகம்

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை.!

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை.!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலாவின் ரூ. 2000 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் விடுதலையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுதாவூர் பங்களா, கொடநாடு பங்களா உள்ளிட்ட சசிகலாவின் ரூ. 2000 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் அதிரடியாக முடக்கியுள்ளனர்.

இது தொடர்பாக வருமான வரித்துறை கூறியுள்ளதாவது ; பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் உள்ள 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் சொத்துகளை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கிடத்த ஆவணங்கள் அடிப்படையில் தொடர் சொத்துக்கள் முடக்கும் நடவடிக்கையில் வருமான வரித்துறை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு சசிகலாவின் சுமார் ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்தும், கடந்த மாதம் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீடு உள்ளிட்ட 300 கோடி மதிப்புள்ள சொத்தும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...