அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி : 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்புஅறிவிப்பு.!

அரசியல்

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி : 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்புஅறிவிப்பு.!

அதிமுக முதல்வர் வேட்பாளராக  எடப்பாடி பழனிசாமி : 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்புஅறிவிப்பு.!

அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்துள்ளது.

முதல்வர் வேட்பாளர் யார் என்பது, இன்று (அக்.,07) அறிவிக்கப்படும் என, அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆதரவு எம்எல்ஏ.,க்களுடனும் தனித்தனி அணியாக உருவாகி ஆலோசனை நடத்தினர். மேலும், அமைச்சர்களும் இருவருடனும் மாறி மாறி ஆலோசனை நடத்தியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பேசிய பன்னீர்செல்வம், முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், பழனிசாமி தான் வரக்கூடிய தமிழக சட்டசபைக்கான அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு, பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதிமுக.,வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தார்

வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:
திண்டுக்கல் சீனிவாசன்
தங்கமணி
எஸ்.பி வேலுமணி
ஜெயக்குமார்
சிவிசண்முகம்
காமராஜ்
ஜேசிடி பிரபாகர் – முன்னாள் எம்.எல்.ஏ
மனோஜ் பாண்டியன்
பா மோகன் – முன்னாள் அமைச்சர்
ரா. கோபால கிருஷ்ணன் முன்னாள் எம்.பி
கி மாணிக்கம் – சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ

Leave your comments here...