42 இயற்கை எரிவாயு மையங்களை திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.!

இந்தியா

42 இயற்கை எரிவாயு மையங்களை திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.!

42 இயற்கை எரிவாயு மையங்களை  திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.!

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு பல்வேறு பகுதிகளை சென்றடைவதை உறுதிப்படுத்தும் விதமாக, 42 இயற்கை எரிவாயு மையங்களையும், 3 சிட்டி கேட் நிலையங்களையும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியின் போது 42 அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு மையங்களும், 3 சிட்டி கேட் நிலையங்களும் அமைச்சருடன் காணொலி மூலம் இணைக்கப்பட்டிருந்தன.ஏழு மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மாநகர எரிவாயு (சிட்டி கேஸ்) விநியோக வலைப்பின்னலை அமைக்கும் பணிக்கான ஒப்புதலை டோரண்ட் கேஸ் பெற்றிருக்கிறது.


உத்திரப் பிரதேசத்தில் 14 அழுத்தமூத்த்தப்பட்ட இயற்கை எரிவாயு மையங்களும், மகாராஷ்டிராவில் எட்டும், குஜராத்தில் ஆறும், பஞ்சாபில் நான்கும், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் தலா ஐந்தும் அமைந்துள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்: எரிவாயு உள்கட்டமைப்பில் $60 பில்லியன் முதலீடு செய்யப்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.விரிவான சில்லறை விநியோக விற்பனையாளர்களாக உருவாக்குமாறு இந்த நிலையங்களை திரு பிரதான் கேட்டுக்கொண்டார்.

Leave your comments here...