மதுரை அருகே வீட்டில் படிக்கட்டு சரிந்து காவலாளி சாவு.!

தமிழகம்

மதுரை அருகே வீட்டில் படிக்கட்டு சரிந்து காவலாளி சாவு.!

மதுரை அருகே வீட்டில் படிக்கட்டு சரிந்து காவலாளி சாவு.!

திருச்சியை சேர்ந்த மகாலட்சுமி அழகர்கோயில் சாலை அப்பன் திருப்பதி பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். மதுரையை சேர்ந்த சரவ ணன் என்பவர் ஒப்பந்த காரராக கட்டிட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இங்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே யுள்ள பட்டமங்கலத்தை சேர்ந்த கணேசன் ( 52 ) என்பவர் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வீட் டின் மேல் பகுதிக்கு செல் லும் படிக்கட்டின் கீழ் அமர்ந்திருந்தார் .அப் போது திடீ ரென படிக்கட்டு சரிந்து விழுந்தது . இதில், இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக சிக்கிக் கொண்டார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் 108 வாகனத்திற்கும் தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர் .மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் அவர் ஏற்கனவே, இறந்து விட்டார் என 108 மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ,உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave your comments here...