முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய் சிங் மகள் ஸ்ரேயாஷி சிங் பா.ஜ.க வில் இணைந்தார்.!

அரசியல்

முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய் சிங் மகள் ஸ்ரேயாஷி சிங் பா.ஜ.க வில் இணைந்தார்.!

முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய் சிங் மகள் ஸ்ரேயாஷி சிங் பா.ஜ.க வில் இணைந்தார்.!

பீகாரை சேர்ந்தவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் முன்னாள் மத்திய இணைஅமைச்சராக இருந்த திக் விஜய் சிங்கின் மகள் ஸ்ரேயாஷி சிங். துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான இவர், 2014ம் ஆண்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார்.

இந்நிலையில், ஸ்ரேயாஷி சிங் இன்று பா.ஜ.,வில் இணைந்தார். பா.ஜ., பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் பீகார் மாநில பா.ஜ., தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் முன்னிலையில் அவர் இணைந்தார். வரும் தேர்தலில், அமர்பூர் அல்லது ஜமுய் தொகுதியில், பா.ஜ., சார்பில், ஸ்ரேயாஷி சிங் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...