சென்னை விமான நிலையத்தில் 34.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் ; ஒருவர் கைது.!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் 34.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் ; ஒருவர் கைது.!

சென்னை விமான நிலையத்தில் 34.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் ; ஒருவர் கைது.!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ க்ஸ் 1644 மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜ்மீர் கான் சையது அலி, 20, ரசிக்அலி முகமத் முஸ்தாபா, 33, மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மன்சூர் அலிகான், 29 ஆகியோரை தங்கம் கடத்தி வருவதாக சந்தேகப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தங்கள் மலக்குடலில் தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து தலா இரண்டு என மொத்தம் 6 தங்க மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


மொத்தம் 653 கிராம் எடையில் 34.23 லட்சம் ரூபாய் மதிப்பிலான 24 காரட் தங்கம் சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டது. ஏற்கனவே வேறு ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்ட ரசிக்அலி முகமத் முஸ்தாபா கைது செய்யப்பட்டார்.இந்த தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர், செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...