ஐஎன்எக்ஸ் மீடியா : அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரம் கைது..!

சமூக நலன்

ஐஎன்எக்ஸ் மீடியா : அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரம் கைது..!

ஐஎன்எக்ஸ் மீடியா : அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரம் கைது..!

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக அளவு அந்நிய முதலீடு பெற்றுக் கொடுக்க ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் உதவியதாக குற்றம்சாட்டப்பட்டது.  இவ்வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப. சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை முயன்று வந்த நிலையில், ப. சிதம்பரம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பான வழக்கில், ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று பேர், இன்று காலை திகார் சிறைக்கு சென்று ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். இரண்டு மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.

Comments are closed.