இந்தியா-வங்கதேச கடற்படைகளின் கூட்டு பயிற்சி நாளை தொடக்கம்.!

இந்தியா

இந்தியா-வங்கதேச கடற்படைகளின் கூட்டு பயிற்சி நாளை தொடக்கம்.!

இந்தியா-வங்கதேச கடற்படைகளின் கூட்டு பயிற்சி நாளை தொடக்கம்.!

இந்தியா-வங்கதேச கடற்படைகளின் 2வது கூட்டு பயிற்சி வடக்கு வங்க கடல் பகுதியில் நாளை தொடங்குகிறது. ‘பாங்கோசாகர்’ என்ற பெயரில் இந்தியா, வங்கதேசம் கடற்படைகள் இடையே கடந்தாண்டு முதல் கூட்டு பயிற்சி தொடங்கியது.

இந்நிலையில் இரு நாடுகள் இடையேயான 2வது கூட்டு பயிற்சி வடக்கு வங்க கடல் பகுதியில் நாளை தொடங்குகிறது.இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கில்டன், குக்ரி போர் கப்பல்களும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இதில் பங்கேற்கின்றன. இதே போல் வங்க தேச போர்க்கப்பல்களும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றன.

இந்த கூட்டு பயிற்சி முடிந்த பின் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ரோந்து பயிற்சிகள் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கின்றன. சர்வதேச கடல் எல்லை பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் ரோந்து பணியில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்பட இந்த கூட்டு ரோந்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Leave your comments here...