சிவகாசி பட்டாசுகள் ஏற்றுமதி செய்வதற்கு கப்பல் சரக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும்: விருதுநகர் எம்.பி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்.!

அரசியல்தமிழகம்

சிவகாசி பட்டாசுகள் ஏற்றுமதி செய்வதற்கு கப்பல் சரக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும்: விருதுநகர் எம்.பி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்.!

சிவகாசி பட்டாசுகள் ஏற்றுமதி செய்வதற்கு கப்பல் சரக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும்: விருதுநகர் எம்.பி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்.!

சிவகாசி பட்டாசுகள் ஏற்றுமதி செய்வதற்கு கப்பல் சரக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என விருதுநகர் எம்.பி மாணிக்கம்தாகூர் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்……

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான முக்கியத் தொழிலாகவும், மத்திய மாநில அரசுகளுக்கு வரிகள் மூலம் பெரும் வருமானம் வழங்கும் தொழிலாகவும், சிவகாசி பட்டாசு தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை என இதில் நேரிடையாக 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இந்தியா முழுவதும் சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் விற்பனையாகி வருகிறது. சிவகாசி பட்டாசுகள் தரம் உயர்வாக இருப்பதால் வெளிநாடுகளுக்கும், கப்பல்கள் வழியாக அனுப்பப்பட்டு வந்தன. காலப்போக்கில் கப்பலில் பட்டாசுகள் அனுப்பும் செலவுகள் அதிகமானதால், விலை உயர்வு ஏற்பட்டு, ஏற்றுமதி வாய்ப்புகள் நின்று போனது. உலக பட்டாசு மார்க்கெட்டில் சீனப் பட்டாசுகள் முதலிடத்தில் இருக்கின்றது. இன்றைய வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சீனவின் ஏற்றுமதி தொழில் சரிவை சந்தித்துள்ளது.

இந்த சூழ்நிலையை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர், மத்திய கப்பல் துறை அமைச்சர் மண்சுக் மாண்ட்வியாவை நேரில் சந்தித்து, சிவகாசி பட்டாசுகளை கப்பல் வழியாக ஏற்றுமதி செய்வதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினார். வெளி நாடுகளுக்கு பட்டாசுகள் ஏற்றுமதி செய்யும் சூழல் நன்றாக உள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து கப்பல்கள் மூலம் பட்டாசுகள் அனுப்பும் செலவுகள், பட்டாசு உற்பத்தி விலையை விட, கப்பல் சரக்கு கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு பட்டாசுகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது.

மற்ற பொருட்களுக்கு வாங்கப்படும் சரக்கு கட்டணத்தை போலவே, பட்டாசுகள் அனுப்புவதற்கும் வசூலித்தால், பட்டாசு ஏற்றுமதி நன்றாக இருக்கும். வெளிநாடுகளுக்கு அனுப்பும் மற்ற பொருட்களுக்கு வாங்கும் சரக்கு கட்டணத்தை போலவே, பட்டாசுகள் அனுப்புவதற்கான சரக்கு கட்டணத்தையும் குறைக்க வேண்டும். இதனால் சிவகாசி பட்டாசுத் தொழில் இன்னும் வளர்ச்சி பெறும். மேலும் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் நிரந்தரமாக கிடைக்கும், மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு வரி வருமானமும் அதிகரிக்கும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சரிடம், எம்.பி மாணிக்கம்தாகூர் வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினார். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று, மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Leave your comments here...