டிக்டாக் செயலி மீதான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை .!

உலகம்

டிக்டாக் செயலி மீதான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை .!

டிக்டாக் செயலி மீதான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு  நீதிமன்றம் இடைக்கால தடை .!

இந்தியாவை அடுத்து அமெரிக்காவும், சீனாவின் டிக்டாக் செயலி, தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. இதையடுத்து, ‘டிக்டாக்கை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படும்’ என, அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

டிக்டாக் செயலியை வைத்திருக்கும் சீன நிறுவனத்துடன், அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம், டிக்டாக்கை வாங்க ஒரு லேசான உடன்படிக்கை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கையை டிக்டாக் மேற்கொண்டது.

இதுகுறித்தான வழக்கு, அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி நிகோல்சிடம், டிக்டாக் வழக்கறிஞர் ஜான் ஹால், ‘டிக் டாக் செயலியை தடை செய்வதால் உள்ளடக்க உருவாக்குனர்கள், ஆயிரக்கணக்கான எதிர்கால பார்வையாளர்கள் ஆகியோரைப் பாதிக்கும். புதிய திறமைகளையும் நாங்கள் கொண்டு வர முடியாது. மேலும் ஏற்கெனவே பயன்படுத்தி வருபவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் அனுப்ப முடியாமல் போகும்’ என, வாதிட்டார்.

மேலும் சீன நிறுவனம் சார்பில், ‘தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் காட்டி செயலியை முடக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் இல்லை. இது டிக் டாக்கின் பேச்சுரிமைகளுக்கான முதல் திருத்தத்தை மீறுவதாகும். மேலும், தேசிய அவசரநிலை போன்று ஏதாவது இருந்தால் தடையை ஒப்புக் கொள்ளலாம். இல்லையெனில் தடை செய்ய சட்டத்தில் இடமில்லை’ என, வாதிட்டனர்.இதையடுத்து, டிக்டாக் செயலி மீதான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு அமெரிக்க நீதிபதி நிகோலஸ் இடைக்கால தடை விதித்தார். இதனால், நவம்பரில் தேர்தல் முடிந்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்பட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...