நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்கியது..!

ஆன்மிகம்

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்கியது..!

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்கியது..!

 


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இன்று ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். பின் கொடிப்பட்டம் வீதி உலா நிறைவடைந்ததும், அம்பாள் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

 

 

நெல்லையப்பர் காந்திமதி அம்பாளின் எழுந்தருள் நிகழ்ச்சி நிரல்..

15.10.2019 செவ்வாய்கிழமை- ஒன்றாம் திருநாள்
மாலை தங்கப்பூங்கோவிலில் திருவீதி பவனி

16.10.2019 புதன்கிழமை- 2ம் திருநாள்
காலை அம்மை வெள்ளிச்சப்பரம்
மாலை பொற்கமல வாகனத்தில் பவனி

17.10.2019 வியாழக்கிழமை – 3ம் திருநாள்
காலை அம்மை பொற்கமல வாகனத்தில் பாடலங்கம்பையில் ஸ்நானம் செய்யப் போகும் திருக்கோலம்
மாலை வெள்ளி சிம்ம வாகனத்தில் பவனி

18.10.2019 வெள்ளிக்கிழமை – 4ம் திருநாள்
காலை அம்மை வெள்ளி காமதேனுவில் பவனி
மாலை இடபவாகன காட்சி

19.10.2019 சனிக்கிழமை – 5ம் திருநாள்
காலை அம்மை இடப வாகன காட்சி
மாலை அம்மை கிளிக்கு கனி கொடுத்து இந்திர விமானத்தில் பவனி

20.10.2019 -ஞாயிற்றுக்கிழமை – 6ம் திருநாள்
காலை அம்மை வெள்ளி அன்னவாகனத்தில்( வெள்ளிச்சப்பரம்)- திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டல்
மாலை அம்மை வெள்ளி அன்னவாகனத்தில்( வெள்ளிச்சப்பரம்) பவனி.

21.10.2019 – திங்கட்கிழமை – 7ம் திருநாள்

காலை அம்மை முத்துப்பல்லாக்கில் தவழ்ந்த கோலம். இரவு வெள்ளி காமதேனுவில் சிவப்பு சாற்றி பவனி. பின்னிரவில் அன்னை வெள்ளை சாற்றி உட்கோவில் உலா.

22.10.2019 – செவ்வாய்க்கிழமை 8ம் திருநாள்
காலை வெள்ளிச்சப்பரத்தில் கோலாட்டம், பச்சை சாற்றி பவனி.
மாலை தங்கக்கிளி வாகனத்தில் பவனி, தேர்கடாட்சம்.

23.10.2019 புதன்கிழமை – 9ம் திருநாள்
காலை தேரோட்டம்
மதியம் அம்மை சிவபூஜை, உச்சிகால நிவேதனத்தை தானேசுவாமிக்கு கொண்டு செல்லல். சுவாமி வேணுவனேஸ்வரருக்கு பஞ்ச முகார்ச்சனை, பஞ்சமுக தீபாராதனை.
இரவு தளவாய் மண்டபத்தில் அபிஷேகம், பின் தந்தப்பல்லாக்கில் சப்தாவர்ண வீணை மீட்டிய கோலத்தில் பவனி.

24.10.2019 வியாழக்கிழமை – 10ம் திருநாள்
காலை பல்லாக்கில் எழுந்தருளி சிந்துபூந்துறையில் தீர்த்தவாரி,
மாலை ஊஞ்சல் மண்டபத்தில் அன்னபூசை,
சுவாமி நெல்லையப்பர் முன்மண்டபத்தில் மாப்பிள்ளை அபிஷேகம்.
பின்னிரவில் தங்கச்சப்பரத்தில் #தபசு கோலத்தில் பாடலங்கம்பையாற்றில் எழுந்தருளி வாகையடியம்மன், சந்திவிநாயகர், வாசிக்க மீண்ட வன்னிமுத்து விநாயகர், அரசரடி விநாயகருக்கு அம்மை திருக்காட்சி தந்தருளி காட்சி மண்டபம் எழுந்தருளல்.

25.10.2019 வெள்ளிக்கிழமை – 11ம் திருநாள்
காலை சுவாமி இடபவாகனத்தில் கம்பைக்குழ எழுந்தருளல், அம்பாள் கோவிலில் பெருமாளுக்கு திருக்காட்சி, சம்பந்தர் கோவிலில் சம்பந்தருக்கு திருகாட்சி
மதியம் காட்சி மண்டபத்தில் காந்திமதியம்மைக்கு திருக்காட்சி பின் அன்னபூசை,
மாலை மாப்பிள்ளை அழைப்பு.
பின்னிரவில் அம்மை கதிர்குளித்தல் சிந்துபூந்துறையில் தீர்த்தவாரி, பல்லாக்கில் ஊரழைக்க பவனி.

26.10.2019 சனிக்கிழமை – 12ம் திருநாள்
அதிகாலை தங்கப்பல்லாக்கில் மாப்பிள்ளை அழைப்பு, இராஜசபையாம் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண காட்சி, காலை சுவாமி வெள்ளி யானையிலும், அம்பாள் பூம்பல்லாக்கிலும் பட்டிணப்பிரவேசம் பவனி.
சுவாமி கோவிலில் இறங்கி பாலும் பழமும் கொண்டருளல், பின் அம்மன் கோவில் ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளல்.
மாலை நலங்கு, ஊஞ்சல்.

27.10.2019 ஞாயிற்றுக்கிழமை – 13ம் திருநாள்
காலை ஊஞ்சல் மண்டபத்தில் அபிஷேகம்,
மாலை நலங்கு, ஊஞ்சல்.

28.10.2019 திங்கட்கிழமை 14ம் திருநாள்
காலை அபிஷேகம், மாலை நலங்கு, ஊஞ்சல்

29.10.2019 செவ்வாய்க்கிழமை 15ம் திருநாள்

காலை சுவாமி அம்பாள் பல்லாக்கில் வீதிவலம், சிந்துபூந்துறையில் தீர்த்தவாரி
மாலை இடப வாகனத்தில் மறுவீடு பட்டிணப்பிரவேசம்.
சுவாமி அம்பாள் இரவு இடப வாகனத்தில் சுவாமி கோவில் எழுந்தருளல்.

நன்றி- நெல்லையப்பர் பக்கம்

Comments are closed.