இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவையை பயன்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை.!

இந்தியா

இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவையை பயன்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை.!

இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவையை பயன்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை.!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி தளத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் பல்வேறு வெளி நோயாளி பிரிவுகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல மையங்களில் நடைபெற்றுள்ளன.

தமிழ்நாடு மற்றும் உத்திரப் பிரதேசத்தில் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொலைதூர ஆலோசனைகள் நடைபெற்றுள்ள நிலையில் இந்த இரு மாநிலங்களும் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன.

தமிழ்நாட்டில் 1,33167 தொலைதூர ஆலோசனைகளும், உத்திரப் பிரதேசத்தில் 1,00124 தொலைதூர ஆலோசனைகளும் இ-சஞ்சீவனி தளத்தின் மூலம் நடைபெற்றுள்ளன.கொவிட்-19 பெருந்தொற்றின் போது பயனாளிகளின் உடல் இடைவெளியை உறுதி செய்து பல்வேறு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை இ-சஞ்சீவனி வழங்கியுள்ளது.

மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்காக இந்த கைபேசி செயலியை 18 க்கும் அதிகமான மாநிலங்கள் பயன்படுத்தியுள்ளன. நாட்டில் முதல் பத்து இடங்களை பிடித்த மாவட்டங்களில் ஏழு தமிழ்நாட்டில் உள்ளன. அவை விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, மயிலாடுதுறை மற்றும் விருதுநகர் ஆகும். விழுப்புரத்தில் 16,368 தொலைதூர ஆலோசனைகளும், மதுரையில் 12,866 தொலைதூர ஆலோசனைகளும் இ-சஞ்சீவனி தளத்தின் மூலம் நடைபெற்றுள்ளன.

Leave your comments here...