குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சி: அமைச்சர் தொடங்கி வைதார்

அரசியல்

குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சி: அமைச்சர் தொடங்கி வைதார்

குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சி: அமைச்சர் தொடங்கி வைதார்

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சியை , வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் பயணியர் விடுதி வளாகத்தில் துவக்கி வைத்தர்

பின்னர் தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க துணைமுதலமைச்சர் வழிகாட்டுதலோடும்,
சமூகநலத்துறை அமைச்சர் , மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் அவர்களும் நமக்கு வழங்கி இருக்கின்ற மேலான உத்தரவிற்கு இணங்க இன்று தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை இந்த கொரோணா காலத்திலும் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இணைந்து எழுச்சியோடும் விழிப்புணர்வோடும் சிறப்பாக நடத்ததி வருகின்றனர்.

ஒரு சமுதாயத்திற்கு மிகவும் அத்தியாவசிய தேவை என்பது ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். அதனால்தான் இந்த ஊட்டச்சத்து மாத விழாவை போஷான் அபியான் 2020 என்று பெயரிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கிமான உடல் நிலையை அடைவதே இந்த திட்டம் ஆகும். தேசிய ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு விட்டிற்கும் சென்று சேர வேண்டும். ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான உணவு, தூய்மையான குடிநீர், சுகாதாரம், சரியான தாய்மை பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துச்சொல்லும் நோக்கத்தோடும், தேசிய ஊட்டச்சத்து இயக்கமானது நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் நல்வாழ்வு சம்பந்தமான கருத்துக்களை அறிய உறுதி மொழி எடுக்கவேண்டும்.

இந்த மக்கள் பேரியக்கத்தின் மூலம் எனது தாய் தமிழ்நாட்டிலுள்ள எனது சகோதரிகள்ää சகோதரர்கள் மற்றும் குழந்தைகள் சிறந்த ஆரோக்கியமானவர்களாகவும்ää திறமையானவர்களாகவும் உருவெடுப்பர் என்கிற உறுதிமொழி ஏற்கவும் ஆரோக்கியமான மக்களால் தான் வலிமையான தேசத்தை உறுவாக்க முடியும் என்பதன் அடிப்படையிலேயே இந்த தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவங்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசு கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு நோய் தொற்றை தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும், நிவாரண பொருட்களை வழங்குவதிலும், நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தி மருத்துவம் செய்வதிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்று பாரத பிரதமர் பாராட்டியுள்ளார்கள்.

மக்களுக்கு விழிப்புணர்வு என்பது அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துச்சொல்ல வேண்டும் தாமாக முன்வரும் நிலையினை நாம் ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக நாம் என்ன வகையான உணவுவகைகளை உண்ண வேண்டும் எந்த வகையான உணவுவகைகளை உண்ணக்கூடாது என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் என்ன வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பது தொடர்பாக தாய் சேய் நலப்பெட்டகம் அங்கங்கே இருக்கக்கூடிய ஆரம்பசுகாதார மையங்களில் தலைசிறந்த மருத்துவர்களின் ஆலோசனையோடு வழங்கப்பட்டு வருகின்றது. ஆரோக்கியமான மக்களால் தான் வலிமையான தேசத்தை உருவாக்க முடியும் என்ற நோக்கத்தோடு தான் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை நடத்திக்கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Leave your comments here...