உள்நாட்டு விமான சேவை : மே 25ல் இருந்து 1 கோடிக்கும் அதிகமானோர் பயணம்.!

இந்தியா

உள்நாட்டு விமான சேவை : மே 25ல் இருந்து 1 கோடிக்கும் அதிகமானோர் பயணம்.!

உள்நாட்டு விமான சேவை : மே 25ல் இருந்து 1 கோடிக்கும் அதிகமானோர் பயணம்.!

உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர்.

2020 மே 25 அன்று உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர்.

இந்த தகவலை விமான போக்குவரத்து இணை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து 1,08,210 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், அதில் ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விமான போக்குவரத்து கொவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பயணத்தில் இந்த மைல்கல்லை அடைந்ததற்காக பங்குதாரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகள் 2020 மார்ச் 25 அன்று நிறுத்தப்பட்டன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது 2020 மே 25 அன்று, விமான சேவைகள் மீண்டும் தொடங்கின.

Leave your comments here...