தியாக தலைவர்களுக்கு நினைவேந்தல் : தேசநலனுக்காக வாழ்ந்தவர் ஏ.ஆர்.வேலுப்பிள்ளை அர்ஜூன் சம்பத் புகழாரம்.!

தமிழகம்

தியாக தலைவர்களுக்கு நினைவேந்தல் : தேசநலனுக்காக வாழ்ந்தவர் ஏ.ஆர்.வேலுப்பிள்ளை அர்ஜூன் சம்பத் புகழாரம்.!

தியாக தலைவர்களுக்கு நினைவேந்தல் : தேசநலனுக்காக வாழ்ந்தவர் ஏ.ஆர்.வேலுப்பிள்ளை  அர்ஜூன் சம்பத் புகழாரம்.!

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை சேத்துபட்டு சங்கரலாயாவில் பெருந்தலைவர் காமராரின் சீடரான ஜனநேசன் ஆசிரியர் காலம்சென்ற .ஏ.ஆர். வேலுப்பிள்ளை (90) வி.குமார், வி.ஜி.நாராயணன், சிவனடியார் சரவணன், அருண்குமார், ஆகியோர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தபட்டது.

அதில் இந்து மக்கள் கட்சி தலைவர் தமிழ்திரு அர்ஜூன் சம்பத் பேசுகையில்:- 1984 ஆம் ஆண்டு மண்டைகாடு மதக்கலவரத்தின் போது பாதிக்கபட்ட இந்துக்களின் பாதுகாப்பிற்காக திரு.தாணுலிங்க நாடார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்து முன்னணி இயக்கத்திற்கு முதுகெலும்பாக செயல்பட்டவர், இந்துக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர், தனது பத்திரிகையான ஜனநேசனில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லையா, என்றும், குமரிமாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம் என பெயற்மாற்றம் செய்ய பலர் முற்பட்டபோது தனது பத்திரிகையில் இந்துக்களே நீங்கள் ஜந்துக்களா என கேட்டு தூங்கி கொண்டிருந்த இந்துக்களை தட்டி எழுப்பியவர் ஏ.ஆர். வேலுப்பிள்ளை அவர்கள் பொது வாழ்வில் தனது 90 வது வயது வரையிலும் சனதன நெறியோடும், கதர் ஆடை அணிந்து காலில் செருப்பு போடாமல் வாழ்ந்தவர் ஜனநேசன் ஆசிரியர் ஏ.ஆர் .வேலுப்பிள்ளை அவர்கள், உள்ளூர் வரலாறு முதல் அயலூர் வரலாறு வரையிலும் நன்கு அறிந்த வேலுப்பிள்ளை அவர்கள் பெருந்தலைவர் மட்டுமல்ல தேசியத்தலைவர்கள், தமிழக தலைவர்கள் அனைவராலும் பாராட்டபட்ட அறிஞர் பெருமகனார் வேலுப்பிள்ளை அவர்கள்.

வறுமையில் வாழ்ந்தாலும் நிறைவோடுவாழ் என்ற கொள்கையை பெருந்தலைவர் காமராஜரின் கொள்கையோடு வாழ்ந்த வேலுப்பிள்ளை அவர்களின் குடும்ப வறுமையால் தனது பிள்ளைகளில் ஒருவர் இன்றளவும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார், அப்படி ஏழ்மை நிலையில் வாழ்ந்த ஜனநேசன் ஆசிரியர் ஏ.ஆர். வேலுப்பிள்ளை அவர்களின் மகன் தான் மூத்த பத்திரிகையாளர் வி.சீனிவாசராமன் அவர் தந்தை வழியில் அறங்களை பின்பற்றி ஆன்மீகத்தையும் அரசியல் கலாச்சார பண்பாட்டையும் தன்னதகத்தே கொண்டு சிறப்பாக பணி செய்யும் வி.சீனிவாசராமன் அவர்கள் தனது தந்தை விட்டு சென்ற பத்திரிகையாளர் பணியினை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கமாகும்.உன்னை போல் தலைவருண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே அன்னை சிவகாமி பெற்ற ஆசியாவின் திருவிழக்கே என்று மக்கள௱ல் பாரட்டும் பெருந்தலைவர் காமராஜரின் கொள்கைபிடிப்போடு வாழ்ந்து நம்மை விட்டு மறைந்த ஜனநேசன் ஆசிரியர் ஏ.ஆர்.வேலுப்பிள்ளை அவர்களின் புகழ் நிலைக்கட்டும், நிலைக்கட்டும் என அர்ஜூன் சம்பத் கூறினார். மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை தருவார், அது பாஜக ஆதரவோடு நடக்கும். தமிழகத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை ,எனவே இந்துக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என கூறினார்.

தமிழக சிவசேனா தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில்:- குமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் பே௱ல் ஏழ்மையோடும், வாய்மையோடும் வாழ்ந்தவர் ஜனநேசன் ஆசிரியர் காலம் சென்ற ஏ.ஆர். வேலுப்பிள்ளை அவர்கள் குமரிமாவட்ட இந்துக்கள் மதம் மாறாமல் உள்ளார்கள் என்றால் அது பத்திரிகையாளர் ஏ.ஆர். வேலுப்பிள்ளை அவர்களை தான் சாரும் அந்த உன்னத மனிதருக்கு புகழாரம் சூட்டுவது இன்றய இளைய தலைமுறைக்கு ஒரு அனுபவ பாடமாகும் என கூறினார்

காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவைத்தலைவர் வளசை கீ.ஜெயராமன் கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் வணங்கும் தெய்வங்களையும், சிவனடியார்களையும், இந்து அமைப்பின் நிற்வாகிகளையும் தொடர்ந்து தாக்கியும்,கொலை பாதகத்திலும் ஈடுபட்டு வருபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் , இதற்கு முடிவு தான் என்ன.? ஜனநேசன் ஆசிரியர் ஏ.ஆர். வேலுப்பிள்ளை அவர்கள் தன் கடைசி மூச்சு உள்ள வரையிலும் இந்து சமுதாயத்திற்காக வாழ்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து ஒற்றுமைக்கு வித்திட்ட பெரியவர் ஏ.ஆர். வேலுப்பிள்ளை அவர்களின் பணிகள் பே௱ற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என வளசை கீ.ஜெயராமன் புகழாரம் சூட்டினார்.

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் ஜெயக்கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில்:- திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பல தலைவர்கள் பெருமைக்குரியவர்கள் அதில் ஜனநேசன் ஆசிரியர் வேலுப்பிள்ளை முதன்மையானவர் காரணம் அத்தனை தலைவர்களிடமும் நெருக்கமாக பழக கூடியவர். தேச ஒற்றுமையை தனது பத்திரிகை மூலம் நிலை நாட்டிய அந்த உத்தமரின் புகழஞ்சலியின் மூலம் அவர் ஒரு வரலாறு ஆவார் எனக் கூறினார்.

பாஜகவின் ஆரம்பகாலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட நித்தியானந்தம் கலந்து கொண்டு பேசுகையில்:- காமராஜரை போல் நேர்மையாக வாழ்ந்தவர் தான் ஏ.ஆர். வேலுப்பிள்ளை. கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகானந்தர் ராக் வருவதற்கு காரமான தலைவர்கள் வரிசையில் ஜனநேசன் ஆசிரியர் ஏ.ஆர். வேலுப்பிள்ளையும் ஒருவராகும். எமர்ஜென்சி காலத்தை கடுமையாக எதிர்த்தவர். யாரை சந்தித்தாலும் ,உள்ளூர் முதல் உலக செய்தி எதுவானாலும் தனது டையரியிலே குறிப்பு எழுதி கெ௱ள்வார். அது ஒரு எழுத்தாளர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதாகும், என தனது புகழஞ்சலியில் உரையாற்றினார்.

சென்னையில் இந்து முன்னணியின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட தியாகவேந்தர் கே.கே.நகர்.ஜெய்கிருஷ்ணன் கலந்து கெ௱ண்டு பேசுகையில் பத்திரிகையாளர் பணியிலும் சரி, சமுதாய பணியிலும் சரி, தேச ஒற்றுமையிலும் சரி, தனது கருத்துக்களை கருத்துக்களாய் வெளியிட்டு குமரி மாவட்டத்தில் இந்துககளின் ஒற்றுமைக்கும், மத ஒற்றுமைக்கும் பாடுபட்டவர் தான் ஏ.ஆர். வேலுப்பிள்ளை. அக்காலத்தில் அவரிடம் பழகாத தலைவர்களே இல்லை. கடிதம் எழுதும் பழக்கத்தை தனது வாழ் நாள் கடைசி வரையிலும் நல்ல பண்பாடுகளை வரலாற்று காப்பியங்களை எழுதுவதில் வல்லவராகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆரம்ப கால வரலாறும் ராஜாக்களின் வரலாறும் , அரசியல் தலைவர்களின் அனுபவ செயல்பாடுகளையும் நன்கு அறிந்தவர்.

1956 முதல் 2020 வரையிலும் இவருக்கும் அத்தனை கடிதங்களையும், அவர் பெற்ற விருதுகளையும் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் காட்சி பொருளாக இல்லாமல் இன்றய இளைய தலைமுறைகள் படித்து பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நல்ல பெருந்தலைவரின் சீடராக வாழ்ந்தார், தேவாரம், திருப்புகழ், இலக்கியத்திலும் புலமை பெற்ற எழுத்துலகின் கிரீடமான அமரர் ஏ.ஆர். வேலுப்பிள்ளை அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை அவரது மகன் வி.எஸ். இராமன் அவர்கள் தொடர்ந்து பயணித்து சிறப்புடன் சமுகபணியாற்றி பலான்மீக சொற்பொழிவாளர் ஆகவும் விவாத மேடைகளில் தனது கருத்துக்களை எடுத்துரைத்து மக்களிடையே சிறப்பாக பணி செய்து வருகிறார் வாழ்த்துக்கள் என கே.கே.நகர் ஜெயக்கிருஷ்ணன் கூறினார்.

இந்த புகழஞ்சலி நிகழ்விற்கு முஸ்லீம் ராஸ்ட்டிரிய மஞ்ச் தலைவர் பாத்திமாஅலி, ஓம்காரனந்த், மதுவந்தி, இந்து மக்கள் கட்சி பொது செயலாளர் பாரதமாதா செந்தில், செயலாளர் ஆனந்த், ஆன்மீக பிரிவின் தலைவரும் திருவேற்காடு ஸ்ரீ சாய்பாப௱ கோயிலில் நிர்வாக தலைவர் ஜோதிடர் கணேசன், இந்துமகாசபா (கெளசிக்) தலைவர் சுப்பையாபாண்டியன், அந்த ராஷ்டிர இந்து சேனா ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கோகுலன், தேசிய ஊடகவியலாளர் நலசங்கத்தின் நிர்வாகிகள் சந்தோஷ், கிருஷ்ணவேணி, பன்னீர்செல்வம், செந்தில், பிரேம்சாகர், மனோஜ், ஸ்ரீ சாய்டிரஷ்ட்டின் சேர்மேன் ஜெயலட்சுமி, வழக்கறிஞர் துளசிராமன், பாஜக நிர்வாகிகள் சைதைபிரகாஷ், ஜெயஸ்ரீ, ஊடக உரிமைகுரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜீபிடர் ரவி, மாநில நிர்வாகிகள் கொளத்தூர் நண்பண் சத்தியா, மக்கள் ஆணையம் முத்தையா, உள்ளிட்ட பல்வேறு சமய சான்றோர்களும், அறிஞர் பெருமக்களும், அரசியல் பிரமுகர்களும், திரளாக கலந்து கெ௱ண்டு ஜனநேசன் ஆசிரியர் ஏ.ஆர் வேலுப்பிள்ளை அவர்களுக்கும், வி.குமார், வி.ஜி.நாராயணன், சிவனடியார் சரவணன், அருண்குமார் ஆகியோர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

Leave your comments here...