நவம்பரில் நடைபெறவிருந்த 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா : ஜனவரி 16ம் தேதி மாற்றம்

சினிமா துளிகள்

நவம்பரில் நடைபெறவிருந்த 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா : ஜனவரி 16ம் தேதி மாற்றம்

நவம்பரில் நடைபெறவிருந்த 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா : ஜனவரி 16ம் தேதி மாற்றம்

கோவாவில் நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவிருந்த, 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2021 ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சவாந்த்துடன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சர்வதேச திரைப்பட விழா வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் படி, இந்த திரைப்பட விழாவை கோவாவில், 2021 ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்த இருவரும் கூட்டாக முடிவு செய்தனர். இந்த விழா மெய்நிகர் மற்றும் நேரடியான நிகழ்ச்சியாக நடத்தப்படும். சர்வதேச திரைப்பட விழா வட்டாரத்தில் சமீபத்தில் நடந்த விழாக்களில் பின்பற்றியபடி, கொவிட் தொடர்பான அனைத்து நெறிமுறைகளும் கடுமையாக அமல்படுத்தப்படும்.

Leave your comments here...