ரூ 62.6 லட்சம் மதிப்புடைய தங்கம், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஐபோன் பறிமுதல் – சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது.!

தமிழகம்

ரூ 62.6 லட்சம் மதிப்புடைய தங்கம், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஐபோன் பறிமுதல் – சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது.!

ரூ 62.6 லட்சம் மதிப்புடைய தங்கம், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஐபோன் பறிமுதல் – சுங்க அதிகாரிகளால்  ஒருவர் கைது.!

ரூ 62.6 லட்சம் மதிப்புடைய தங்கம், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஐபோன் ஆகியவை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன, ஒருவர் கைது.

நுண்ணறிவுத் தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் மூலம் சென்னை வந்த பயணி ஒருவர் சுங்கத்துறையின் வருகைக் கூடத்தில் புதன்கிழமை காலை தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை சோதனையிட்டபோது, உள்ளாடைக்குள் ரூ 21.4 லட்சம் மதிப்புடைய 412 கிராம், 24 கேரட் தங்கம் பசை வடிவில் நெகிழி பைகளுக்குள் வைத்து தைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவரடு கால்சட்டைப் பையில் இருந்து ரூ 5 லட்சம் மதிப்புடைய 98 கிராம் தங்க காப்பும் கைப்பற்றப்பட்டது. அவரது கைப்பையை சோதனை செய்த போது, 5 ஆளில்லா விமானங்கள் மற்றும் 2 ஐபோன் 11 கண்டறியப்பட்டன.

இவற்றின் மதிப்பு ரூ 5.6 லட்சம் ஆகும். மொத்தம் ரூ 32 லட்சம் மதிப்புடைய தங்கம், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஐபோன் ஆகியவை சுங்க சட்டம், 1962-இன் கீழ் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. பயணி கைது செய்யப்பட்டார்.


விருதுநகரை சேர்ந்த ஒரு பயணியும், கடப்பாவை (ஆந்திரப் பிரதேசம்) சேர்ந்த இரண்டு பயணிகளும் முறையே தோஹா மற்றும் குவைத்தில் இருந்து இண்டிகோ மற்றும் குவைத் ஏர் விமானங்களில் செவ்வாய் அன்று சென்னை வந்தனர். வெளியேறும் வழியில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சோதனையின் போது ஒரு பயணியின் கால்சட்டைப் பையில் இருந்து தங்கக் காப்பு கைப்பற்றப்பட்டது. இரு பயணிகளிடம் இருந்து ஒரு தங்க சங்கிலி மற்றும் ஒரு தங்கத் துண்டு கைப்பற்றப்பட்டன. சுங்க சட்டம், 1962-இன் கீழ் ரூ 30.6 லட்சம் மதிப்புடைய 586 கிராம்கள் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் ரூ 57 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் ரூ 5.6 லட்சம் மதிப்புடைய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஐபோன்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 62.6 லட்சம் என்று சென்னை விமான நிலைய சுங்க ஆணையர் செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...