திருப்பூர் அரசு மருந்துவமனையில் 4 பேர் உயிரிழந்ததை எதிர்கட்சி தலைவர் அரசியல் நோக்கத்துடன் பேசுவாதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு.!

அரசியல்

திருப்பூர் அரசு மருந்துவமனையில் 4 பேர் உயிரிழந்ததை எதிர்கட்சி தலைவர் அரசியல் நோக்கத்துடன் பேசுவாதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு.!

திருப்பூர் அரசு மருந்துவமனையில் 4 பேர் உயிரிழந்ததை எதிர்கட்சி தலைவர் அரசியல் நோக்கத்துடன் பேசுவாதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு.!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 15 லட்சம் மதிப்பிலான ஹைடெக் 108 ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர் சந்திப்பில், இராஜபாளையம் மிக பெரிய தொழில் நகரம். இந்த பகுதியில் இரண்டு மருத்துவமனைகள் உள்ளது. இந்த மருத்துவமனை நிர்வாகம் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இதை மக்கள் நலனுக்காக மக்கள் கோரிக்கை ஏற்று தனித் தனியாக செயல்பட முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும்,

இராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலின் போது அதிகமான அளவில் பாதிக்கப்பட்டது. அதேபோல் தற்போது கொரோனா காலத்திலும் அதிக பாதிப்பு இருந்த நிலையில் அரசின் நடவடிக்கையால் தற்போது தொற்று அதிக அளவில் குறைந்து, இந்த பகுதியில் 25 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு செல்வார்கள். அந்த அளவிற்கு அம்மாவின் அரசு முதலமைச்சர் எடப்பாடி அவர்களால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் இந்த மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களும் உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பு அவர்களுக்கு தேவையான அளவிற்கு ஒவ்வொருவருடைய படுக்கை அருகே ஆக்சிசன் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்யின்றி உயிரிழந்தவர்கள் 4 பேர் குறித்து ஸ்டாலின் கருத்து கூறுவது எதிர்க்கட்சி என்ற முறையில் கருத்துக் கூறி வருகிறார். தமிழகம் முழுவதும் தேவையான அளவிற்க்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பொருள்கள் தேவையான அளவிற்க்கு சகல வசதிகளும் அம்மாவின் அரசு சிறப்பாக செய்துள்ளது. ஸ்டாலின் அரசியல் நோக்கத்துடன் இந்த குற்றச்சாட்டை வைப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.

Leave your comments here...