உத்திர பிரதேசத்தில் பிரம்மாண்ட பிலிம் சிட்டி : முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி திட்டம்..!

அரசியல்இந்தியாசினிமா துளிகள்

உத்திர பிரதேசத்தில் பிரம்மாண்ட பிலிம் சிட்டி : முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி திட்டம்..!

உத்திர பிரதேசத்தில் பிரம்மாண்ட பிலிம் சிட்டி :  முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி திட்டம்..!

உத்திர பிரதேசத்தின் கவுத்புத் நகரில், இந்திய மிகபெரிய, பிரமாண்டமான பிலிம் சிட்டியை உருவாக்கும் மிகபெரிய திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொண்டு வந்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரம் ( Film City ) ஹஸ்தினாபூர் அருகில் கட்டப்பட உள்ளது. இது நாட்டின் சிறந்த அடையாளாக ( symbol of nation’s identity ) இருக்கும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (செப்.,22) கூறினார். இது தொடர்பாக திரைப்பட துறையின் பல முன்னனி உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில், புதிய திரைப்பட நகரத்திற்கான தனது திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யாத் கூறுகையில்:- உ.பி.,யில் பிலிம் சிட்டிக்கு சுமார் 1000 ஏக்கர் நிலத்தை மாநில அரசு வழங்கவுள்ளது. யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில் துறை மேம்பாட்டுப் பகுதியின் பிரிவு -21 இல் திரைப்பட நகரத்தை நிறுவும் திட்டம் உள்ளது. இதற்காக சுமார் 780 ஏக்கர் தொழில்துறை பரப்பளவு முன்மொழியப்பட்டுள்ளது. உ.பி.,யின் ஹஸ்தினாபூர் அருகில் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரம் ( Film City ) கட்டப்படும். யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் [Yamuna Expressway Industrial Development Authority (( YEIDA)] இது குறித்து விளக்கத்தை அரசக்கு அனுப்பியது.

இந்த திரைப்பட நகரம் இந்தியாவின் சிறந்த அடையாளங்களில் ( symbol of nation’s identity ) ஒன்றாக மாறும். இது கங்கை மற்றும் யமுனைக்கு இடையேயான பகுதி. டில்லியை ஆக்ராவுடன் இணைக்க யமுனாஜியின், இணையாக, யமுனா அதிவேக நெடுஞ்சாலை கட்டப் பட்டுள்ளது. மேலும் இந்த பகுதி முழுவதும் அதன் மத்தியில் விழுகிறது. யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதாலும், Jewar நொய்டா சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்க 6 கி.மீ தூரத்தில் இருப்பதாலும், ரயில்வேயுடன் நன்கு இணைக்கப் பட்டுள்ளதாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. இவ்வாறு கூறினார்.

Leave your comments here...