வேளாண்மை மசோதாக்கள் தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிக்காது – டெல்டா விவசாயிகள் நல சங்கம்

தமிழகம்

வேளாண்மை மசோதாக்கள் தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிக்காது – டெல்டா விவசாயிகள் நல சங்கம்

வேளாண்மை மசோதாக்கள் தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிக்காது – டெல்டா விவசாயிகள் நல சங்கம்

வேளாண்மை மசோதாக்கள் தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிக்காது என டெல்டா விவசாயிகள் நலசங்கம் கூறியுள்ளார்.

புதிய வேளாண்மை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது இந்திய வேளாண்மைத் துறை வரலாற்றில் திருப்புமுனை தருணமாக அமைந்துள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை தொடரும் என்றும் அரசுக் கொள்முதல் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதே இருக்காது என்னும் குழப்பமூட்டும் செய்திகளால் விவசாயிகள் வருத்தமடைந்திருந்தனர், ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை தொடரும் என்றும் விவசாயிகளின் பேரம் பேசும் சக்தியை உயர்த்துவதை புதிய சட்டங்கள் நோக்கமாக கொண்டுள்ளன என்றும் பிரதமரே தெளிவுபடுத்தி இருக்கிறார். விவசாயிகளில் 85 சதவீதம் பேர் சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் என்றும், விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்கள் அவர்களை ஒருங்கிணைத்து நல்ல உள்ளீட்டு விலைகள் மற்றும் சிறந்த மகசூலை பெற செய்யலாம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020, வேளாண் பொருட்களின் விற்பனைக்காகவும், கொள்முதலுக்காகவும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சுதந்திரத்தை அளிக்கிறது. வேளாண் பொருட்களின் சுதந்திரமான போக்குவரத்தையும், தடையில்லா விற்பனையையும் இது ஊக்குவிக்கிறது. திருச்சிராப்பள்ளியில் இருக்கும் ஓய்வு பெற்ற அதிகாரியான திரு பாலகோபால், இயற்கை பேரிடரால் வேளாண் பொருட்களின் விலைகள் உயரும் போதெல்லாம் இடைத்தரகர்களுக்கும், வியாபாரிகளுக்கும் தான் பலன் கிடைக்கிறது என்கிறார். இந்தப் புதிய சட்டத்தின் மூலம், விவசாயிகள் இடைத்தரகர்களை தவிர்த்து தங்களது பொருட்களை நேரடியாக விற்கலாம். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடருமென்றும், விவசாயிகள் தங்கள் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்கலாம் என்றும் அரசு கூறியுள்ளது. உள்ளூர் சந்தைகளைத்தவிர இதர இடங்களிலும் தங்கள் பொருட்களை விவசாயிகள் விற்கலாம். மின்-தேசிய வேளாண் சந்தை முறையும் சந்தைகளில் தொடரும்.

பிச்சாண்டார்கோவிலில் சீரக சம்பா பயிரிடப்பட்டுள்ள நிலம்

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020, மொத்த விற்பனையாளர்கள், பெரிய சில்லறை வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு கொள்ள விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. பயிர்களை விதைப்பதற்கு முன்பே உறுதியான விலையை விவசாயிகள் பெறலாம். சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து விவசாயிகளை இது பாதுகாக்கும். பெரிய அளவில் விவசாயிகளைப் போட்டிப் போட செய்யும் விதமாக,10,000 விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அசாதாரண சமயங்களில் தானியங்கள், பருப்புகள், சமையல் எண்ணெய் மற்றும் வெங்காயங்கள் ஆகியவை நியாயமான முறையில் கிடைப்பதை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்த மசோதா 2020 முன்மொழிகிறது.

திருவாசி கிராமத்தில் வேளாண் செயல்பாடுகள்

நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள வேளாண்மை மசோதக்களை வரவேற்றுள்ள தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி, அவை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று கூறியுள்ளார். கொள்முதல் தொடருமென்றும் மாநில அரசு உறுதியளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண்மை மசோதாக்கள் தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிக்காது என்று தமிழ்நாடு காவேரி டெல்டா விவசாயிகள் நல சங்கம் தெரிவித்துள்ளது.நாடு கொவிட்-19 உடன் போராடிக் கொண்டிருந்த போது உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் விவசாயிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், வேளாண்மையை லாபமளிக்கும் தொழிலாக மாற்றவும் அரசு சட்டங்களை இயற்றி வருகிறது.

Leave your comments here...