கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டரை பரிசாக வழங்கி கவுரவித்து மகேந்திரா நிறுவனம்..!

இந்தியா

கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டரை பரிசாக வழங்கி கவுரவித்து மகேந்திரா நிறுவனம்..!

கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டரை பரிசாக வழங்கி  கவுரவித்து மகேந்திரா நிறுவனம்..!

பீகார் மாநிலம் கயாவில் 3 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்த விவசாயி லோங்கி புய்யானுக்கு மகேந்திரா நிறுவனம் டிராக்டரை பரிசாக வழங்கியிருக்கிறது.

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி லாங்கி புய்யன் மலைப்பகுதியிலிருந்து மழைநீர் குளத்திற்கு வரும் வகையில் 3 கி.மீ., நீளத்திற்கு தனி ஆளாக நின்று கால்வாய் வெட்டியுள்ளார்.இதை 30 ஆண்டுகள் தனியாக பாடுபட்டு சாதித்துள்ளார். இவருடைய சாதனையை மகிந்திரா டீலர் ஒருவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.


இதை அறிந்த மகிந்திரா குழுமத் தலைவர் அவருடைய சாதனையை கவுரவிக்கும் விதமாக விவசாயி லாங்கி புய்யனுக்கு ஆனந்த் மகிந்திரா டிராக்டர் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.இது குறித்து மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா, ‛விவசாயி 30 வருடங்களை செலவழித்து கால்வாயை அமைத்துள்ளார். அவருடைய சாதனையை பாராட்டி இவருக்கு டிராக்டர் பரிசாக வழங்குவதில் மகிந்திரா நிறுவனம் பெருமையடைகிறது’ இவ்வாறு கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயி தனக்கு டிராக்டர் பரிசாக கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கூறினார்.

Leave your comments here...