ஜம்மு-காஷ்மீரை பூமியை சொர்க்கமாக மாற்ற நாம் பாடுபடுவோம்: குடியரசுத் தலைவர்

இந்தியா

ஜம்மு-காஷ்மீரை பூமியை சொர்க்கமாக மாற்ற நாம் பாடுபடுவோம்: குடியரசுத் தலைவர்

ஜம்மு-காஷ்மீரை பூமியை சொர்க்கமாக மாற்ற நாம் பாடுபடுவோம்: குடியரசுத் தலைவர்

அறிவு, தொழில் முனைதல், புதுமைகள் மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றின் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம் ஆகும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கூறினார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான மாநாட்டில் பேசும்போது குடியரசுத் தலைவர் இவ்வாறு கூறினார்.ஜம்மு-காஷ்மீரை பூமியின் சொர்க்கமாகவும், பாரத மாதாவின் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கமகவும் மாற்ற நாம் பாடுபடுவோம் என்று திரு கோவிந்த் கூறினார்.


ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர், அங்குள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் ஸ்ரீ நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.


அவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உறுதியான முயற்சிகளின் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தி, இந்த சொர்க்கத்தை அறிவு, புதுமைகள் மற்றும் கற்றலின் மையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Leave your comments here...