‘மனித மூலதன குறியீடு’ பட்டியலில், இந்தியா, 116வது இடத்தை பிடித்துள்ளது.!

இந்தியா

‘மனித மூலதன குறியீடு’ பட்டியலில், இந்தியா, 116வது இடத்தை பிடித்துள்ளது.!

‘மனித மூலதன குறியீடு’ பட்டியலில், இந்தியா, 116வது இடத்தை பிடித்துள்ளது.!

உலக வங்கி, 174 நாடுகளில், கல்வியறிவு பெற்ற குழந்தைகள், அவர்களின் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில், ஆண்டுதோறும், மனித மூலதன குறியீட்டு பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி இந்தாண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மனித மூலதன குறியீட்டில், இந்தாண்டு இந்தியாவின் பங்கு, 0.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2018ல், ௦.44 சதவீதமாக இருந்தது. இந்த வகையில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாடுகளில், இந்தியா, 116வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு, 115வது இடத்தில் இருந்தது.கொரோனா பாதிப்புக்கு முன், குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் கூட, படித்த, ஆரோக்கியமான குழந்தைகளின் சதவீதம் அதிகரித்திருந்தது. ஆனால், கொரோனா வால் இந்த வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஆரோக்கியத்தில் மேம்பாடு, குழந்தைகளின் வாழ்நாள் விகிதம் ஆகியவற்றில் கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

பத்தாண்டுகளாக கண்டு வந்த வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. பொருளாதார தாக்கம், குறிப்பாக, பெண்களையும், சாதாரண குடும்பங்களையும் பெரிதும் பாதித்து உள்ளது. ஏராளமானோர் வறுமைக்கு தள்ளப்பட்டுஉள்ளனர். 100 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.இத்தகைய நிலையை மாற்றி, நிலையான மனித மூலதன வளர்ச்சிக்கு தேவையான முதலீடுகளையும், திட்டங்களையும், உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...