சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்தால் சுட்டு தள்ளுங்கள் – வடகொரியா அதிபர் கிம் ஜாங்

உலகம்

கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார்.

உலகமே கொரோனாவால் நடுங்கிக் கொண்டிருக்க, வடகொரியா மட்டும், கொரோனா பாதிப்பு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடுவது இல்லை.இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவலை தொடர்ந்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடியது.இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையையும் வடகொரியா அமுல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட வடகொரியா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.

Leave your comments here...