தொடரும் இந்திய சீன எல்லை விவகாரம் : இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை ..!

இந்தியாஉலகம்

தொடரும் இந்திய சீன எல்லை விவகாரம் : இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை ..!

தொடரும் இந்திய சீன எல்லை விவகாரம் : இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை ..!

எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களுக்கான மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயையும் சந்தி்தார்.

இந்திய சீன எல்லை விவகாரம் இன்னும் முடிவுக்குவராத நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயை ரஷ்யாவில் சந்தித்து பேசியது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்றபோது, சீன ராணுவ மந்திரி வெய் பெங்கியை இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது அவர், சீன துருப்புகள் ஒரு தலைபட்சமாக அசல் கட்டுப்பாட்டு கோட்டுடனான நிலைமையை மாற்ற முயற்சிக்கும் செயல், இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று கண்டித்ததுடன், மோதல் பகுதிகளில் இருந்து படைகளை முழுமையாக விலக்கிக்கொள்ள இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் நடத்தினார். இதில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், லடாக் மோதல் வலுத்து வருகிற நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து பேசினார்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எல்லையில் நிலவும் பிரச்சினையை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி எல்லைப் பிரச்சினையை தீர்க்க 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.மேலும், எல்லையில் தற்போது நிலவும் சூழல், இருநாடுகளின் நலனுக்கும் உகந்தது அல்ல என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Leave your comments here...