முககவசம் அணியாமல், பேருந்துகளில் இருந்தவர்களை இறக்கிவிட்ட தாசில்தார்…!

சமூக நலன்

முககவசம் அணியாமல், பேருந்துகளில் இருந்தவர்களை இறக்கிவிட்ட தாசில்தார்…!

முககவசம் அணியாமல், பேருந்துகளில் இருந்தவர்களை இறக்கிவிட்ட தாசில்தார்…!

விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது போக்குவரத்து துவங்கிய நிலையில், பேருந்துகளில் வந்து செல்லும் பயணிகள், பெரும்பாலும் முககவசம் அணியாமல் இருக்கின்றனர். இதனை கண்காணித்து வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

காரியாபட்டி பேருந்து நிலையத்தில் தாசில்தார் தனக்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார் இராஜீவ்காந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காசிமாயன், ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு முககவசம் அணிந்து வர வலியுறுத்தினர். மேலும் பேருந்துகளில் முககவசம் இல்லாத பயணிகளை இறக்கி விட்டனர். வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்லுமாறும், வெளியிடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் விதிக்கப்படும் என்று வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

Leave your comments here...