நான்கு கிறிஸ்துவ என்.ஜி.ஓ., அமைப்புகளின் உரிமம் ரத்து – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

இந்தியா

நான்கு கிறிஸ்துவ என்.ஜி.ஓ., அமைப்புகளின் உரிமம் ரத்து – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

நான்கு கிறிஸ்துவ என்.ஜி.ஓ., அமைப்புகளின் உரிமம் ரத்து – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கு எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நிதிபங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் பெறுவது அவசியமாகும்.

இந்நிலையில், இந்த ஆண்டு 6 என்.ஜி.ஓ.,க்கள் அமைப்பின் வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டதில் 4 கிறிஸ்துவ அமைப்புகளும் அடங்கும். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த செவந்த் டே அத்வந்து மற்றும் பேப்டிஸ்ட் சர்ச் உள்ளிட்ட நன்கொடையளிக்கும் 2 கிறிஸ்துவ அமைப்புகளும் மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் உள்ள எக்ரியோசொக்யூலிஸ் நார்த் வெஸ்டர்ன் காஸ்னர் இவாஞ் செலிக்கல், லூதரன் சர்ச், மணிப்பூரில் உள்ள சர்ச் கூட்டமைப்பு மற்றும் மும்பையில் உள்ள நியூ லைப் பெலோஷிப் அசோசியேஷன் ஆகியவற்றின் வெளிநாட்டு நிதிபெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரத்து செய்ததற்கான காரணமும், என்ன மீறல் என்பதும் குறிப்பிடப்படவில்லை.

மும்பையில் கடந்தாண்டு ஏப்ரலிலும், செப்டம்பரிலும் நியூலைப் பெலோஷிப் அசோசியேஷனில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தை, மதமாற்றம் செய்வதாக கூறி பஜ்ரங் தள் அமைப்பு இடையூறு செய்து தடுத்தது. இந்நிலையில், 1964 முதல் செயல்பட்டு வந்த நியூ லைப் அமைப்பின் வெளிநாட்டு நிதிபெறும் உரிமம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இப்போது வரை வெளிநாட்டு நன்கொடை பெறும் சட்டத்தின் கீழ் 22,457 என்.ஜி.ஓ. அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20,674 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6,702 உரிமங்கள் காலாவதியாகியுள்ளன.

Leave your comments here...