தொழில் துவங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம் : தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா…?

இந்தியா

தொழில் துவங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம் : தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா…?

தொழில் துவங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம்  : தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா…?

தொழில் துவங்க மிகவும் சாதகமான மாநிலங்கள் பட்டியலை 2015 முதல் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு அம்சங்களின் கீழ் மாநிலங்கள் பட்டியலிடப்படுகின்றன.

இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆந்திர மாநிலத்திற்கு முதல் இடம் கிடைத்தது. தமிழகத்திற்கு 14வது இடம் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தொழில் துவங்க அனுமதி வழங்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.உத்தர பிரதேசம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. உத்தர பிரதேசம் இந்த பட்டியலில் முன்னேறி உள்ளது. தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் சட்டங்களை உத்தர பிரதேசம் மாற்றியதாக கூறப்படுகிறது.உத்தர பிரதேசத்திற்கு அடுத்து தெலுங்கானா மூன்றாம் இடம் பிடித்துள்ளது.4வது இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது. 5வது இடத்தை ஜார்கண்ட் பிடித்துள்ளது.சட்டீஸ்கர் 6வது இடத்திலும், இமாசலப்பிரதேசம் 7வது இடத்திலும் உள்ளது. முதல் 10 இடங்களில் இரண்டு தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமே இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிராவும் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 14 இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் முதலீடுகள் அதிகரித்தாலும் தொழில் துவங்குவதற்கு சாதகமான மாநிலங்கள் பட்டியலில் 14வது இடம் கிடைத்துள்ளது. இதற்கு வணிகம் எளிதாக்குதல் சட்டத்தின் கீழ் ஒற்றைச்சாளர முறையில் 30 நாட்களில் தொழில் துவங்க அனுமதி வழங்கப்படாததே காரணம்.அதிகாரிகளை சந்திக்காமல் ஆன்லைன் வழியாக அனுமதி வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். ஆனால் தற்போது சுற்றுச்சூழல் துறை கட்டுமான அனுமதி மின்சார வினியோகம் என முக்கியமான துறைகளில் அனுமதி வழங்க தாமதிக்கின்றனர். அவர்களை நேரடியாக சந்தித்தாலே அனுமதி வழங்கப்படும் என்ற நிலை இருக்கிறது. தற்போது கூட பெரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.எனவே அதிகாரிகள் தலையீடு இன்றி விரைந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தாலே முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வர முடியும்.

Leave your comments here...