இராமநாதபுரத்தில் பரபரப்பு..? பட்டப்பகலில் வாலிபர் குத்திக் கொலை – போலீசார் தீவிர விசாரணை..!

சமூக நலன்தமிழகம்

இராமநாதபுரத்தில் பரபரப்பு..? பட்டப்பகலில் வாலிபர் குத்திக் கொலை – போலீசார் தீவிர விசாரணை..!

இராமநாதபுரத்தில் பரபரப்பு..? பட்டப்பகலில் வாலிபர் குத்திக் கொலை – போலீசார் தீவிர விசாரணை..!

ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் என்பவரின் மகன் அருண் பிரகாஷ் (வயது 22) . இவர் தனது நண்பரான அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் யோகேஸ்வரன் (23) என்பவருடன் ராமநாதபுரம் வசந்த நகர் விலக்கு ரோடு பகுதியில் ஏ.டி.எம். மையம் அருகே நேற்று பிற்பகலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

ராமநாதபுரம் வசந்த நகர் விலக்கு கள்ளர்தெரு ஏ.டி.எம்.,அருகில் நேற்று மாலை 4:00 மணிக்கு அப்பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் அருண்பிரகாஷ் 22, சுரேஷ் மகன் யோகேஸ்வரன் 23, பேசிக்கொண்டுஇருந்தனர்.அங்கு ஐந்து டூவீலர்களில் வந்தவர்கள் அருண்பிரகாஷ், யோகேஷ் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் அருண்பிரகாஷ் இறந்தார். யோகேஸ்வரன் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.கொலையில் ஈடுபட்டவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கொலை நடந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave your comments here...