திருவெற்றி அய்யனார், நொண்டிச்சாமி ஆலய மகாகும்பாபிஷேகம்.!

ஆன்மிகம்

திருவெற்றி அய்யனார், நொண்டிச்சாமி ஆலய மகாகும்பாபிஷேகம்.!

திருவெற்றி  அய்யனார், நொண்டிச்சாமி ஆலய மகாகும்பாபிஷேகம்.!

மதுரை அருகே மாலைப்பட்டியில் அருள்மிகு வெற்றி அய்யனார் மற்றும் நொண்டிச்சாமி ஆலய மஹா கும்பாபிஷேகமானது திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

விழாவையொட்டி, சிவாச்சாரியார்களால், பிரவேசபலி, மிருஞ்த கரனம், முதல்கால யாக பூஜைகளும், பூரணாஹுதியூம் நடைபெற்றது.திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகள், யாத்ராதானம், நாடிசந்தானம், மஹாபூர்ணாகுதியும், அதைத் தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு வந்து, கோயில் கலசத்தில் மஹாகும்பாபிஷேகத்தையொட்டி, புனித நீர் ஊற்றப்பட்டது.

இதையடுத்து, சுவாமிகளுக்கு மஹாஅபிஷேகமும், அலங்காரம் மற்றும் தீபாராதணை, அன்னதானம் வழங்குதல் ஆகியவை ஆலய கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்.

Leave your comments here...