இயக்குனர் மணிரத்னம் உள்பட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பாய்கிறது
- October 4, 2019
- jananesan
- : 870
இயக்குநர்கள் மணிரத்னம், உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர்.இந்த கடிதத்துக்கு எதிராக பீகாரின் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அதில், பிரபலங்கள் எழுதிய இந்த கடிதம் தேசத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது. பிரதமர் மோடிக்கு அவதூறு ஏற்படுத்துகிறது. இந்த கடிதம் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானது என சுதிர் குமார் ஓஜா குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த முசாபர்நகர் தலைமை நீதிபதி சூர்யகாந்த் திவாரி , அனைவரும் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து முசாபர் நகர் போலீசார் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பேர் மீதும் தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.