மு.க.அழகிரி மௌனம் கலைத்தால் திமுகவில் பூகம்பம் தான் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அரசியல்

மு.க.அழகிரி மௌனம் கலைத்தால் திமுகவில் பூகம்பம் தான் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மு.க.அழகிரி மௌனம் கலைத்தால் திமுகவில் பூகம்பம் தான் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மு.க.அழகிரி தனது மௌனத்தை கலைத்தார் என்றால் திமுகவில் மிகப் பேரிய பூகம்பம் வெடிக்கும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் உணவு வழங்கப்பட்டு வருகிறது அதன் ஐம்பதாவது நாளான இன்று, அமைச்சர் ஆர் பி உதயகுமார் அதனைப் பார்வையிட்டார் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையின் படி தான் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது தமிழுக்கு பாதிப்பு ஏற்படாமல் அதன் செழுமைக்கு இந்த அரசு என்றும் பாடுபடும்.

மதுரை இரண்டாவது தலைநகர் என்ற எங்களது கருத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம் இதுகுறித்து தமிழக முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார். அமைச்சர் பதவியை விட மதுரை இரண்டாம் தலைநகர் என்ற எனது கோரிக்கைக்கு நான் முக்கியத்துவம் அளிப்பேன்.அடுத்த முதல்வர் யார் என்று தலைமை கழகம் கூடி முடிவெடுக்கும் அதுகுறித்து எங்கும் கருத்து சொல்லக்கூடாது என்பது தலைமையின் கட்டளை.

இத்தனை மாதங்களாக திமுகவின் பொதுச்செயலாளர் பதவி ஏன் இதுவரை நிரப்பப்படவில்லை..? அந்த கட்சியில் தலைவர்கள் தான் அதிகமாக உள்ளனர் . தொண்டர்கள் இல்லை. அவர்கள் அதிமுகவை பற்றி குறை கூறுகிறார்கள்.தற்போது மௌனத்தில் இருக்கும் மு.க.அழகிரி தனது மௌனத்தை கலைத்தார் என்றால் திமுகவில் மிகப் பேரிய பூகம்பம் வெடிக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், முதல்வர் விழாவில் பங்கேற்கலாம். ஆனால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து விட்டு வர வேண்டும் என்றார்

Leave your comments here...