வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கும் டெண்டர் : சீன ஊடுருவ முயற்சி – அதிரடியாக டெண்டரை ரத்து செய்த இந்திய ரயில்வே..!

இந்தியா

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அதிவேக ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டது. இதற்காக சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டது.இந்த டெண்டரில் சில இந்திய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உள்பட 6 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் சீனாவை தலைமையாக சிஆர்ஆர்சி எலக்ட்ரானிக்ஸ் என்ற சர்வதேச நிறுவனம்டெண்டரை கைப்பற்ற முயற்சித்தது. இதையறிந்த இந்திய ரயில்வே வந்தேபாரத் ரயில் பெட்டிக்கான சர்வதேச டெண்டரை திடீரென ரத்து செய்தது.

இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பல வீரர்கள் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் இந்திய-சீன நாடுகளிடையே பகை ஏற்பட்டுள்ளது. சீனா மீதும் சீனா சார்ந்த நிறுவனங்கள் மீது இந்தியா பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில், விரைவு ரயில்களுக்கான 44 ரெயில் பெட்டிகளை தயாரிப்பது தொடர்பாக விடப்பட்ட சர்வதேச டெண்டரை இந்தி ரயில்வே ரத்து செய்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டரிலும் வெளியிடப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave your comments here...