மதுரை பேச்சியம்மன் கோவிலில் பழமையான ஐம்பொன் சிலைகள் திருட்டு – சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

சமூக நலன்தமிழகம்

மதுரை பேச்சியம்மன் கோவிலில் பழமையான ஐம்பொன் சிலைகள் திருட்டு – சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

மதுரை பேச்சியம்மன் கோவிலில் பழமையான ஐம்பொன் சிலைகள் திருட்டு –  சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

மதுரை பேச்சியம்மன் படித்துறை அருகேயுள்ள பேச்சியம்மன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறது.

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ளது பேச்சியம்மன் படித்துறை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள முக்கியமான படித்துறைகளில் ஒன்றாகும். இதன் கரையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பேச்சியம்மன் கோவில் உள்ளது. இதில் அய்யனார் பொன்னர் சங்கர் பிள்ளையார் ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகள் உள்ளன. இக்கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம கும்பல் ஒன்று இம்மூன்று சிலைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது கோவில் பூசாரி காலையில் திறந்து பார்க்கையில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளதை அறிந்து திலகர் திடல் காவல்துறைக்கு புகார் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து கோவில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கோவிலின் பூசாரி பேச்சிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். நூற்றாண்டு பழமையான கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave your comments here...