ராஜபாளையம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் 15 லட்சம் கொள்ளை.? போலீஸ் விசாரணை..!

தமிழகம்

ராஜபாளையம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் 15 லட்சம் கொள்ளை.? போலீஸ் விசாரணை..!

ராஜபாளையம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் 15 லட்சம் கொள்ளை.?  போலீஸ் விசாரணை..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர்ஆர் நகர் அருகே உள்ள கலங்கபேரியைச் சேர்ந்தவர்கள் வரதராஜ், ராமசாமி. இவர்கள் இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு, நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 15 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனதாகக் கூறி இருவரும் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் நிதி நிறுவனத்தில் கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஆறு ஊழியர்களிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிதி நிறுவனத்தில் 15 லட்சம் கொள்ளை போனது, அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...