கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு. தமிழக அரசின் அரசானையை திரும்பப்பெற வேண்டும்-அர்ஜூன் சம்பத்

சமூக நலன்

கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு. தமிழக அரசின் அரசானையை திரும்பப்பெற வேண்டும்-அர்ஜூன் சம்பத்

கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு. தமிழக அரசின் அரசானையை திரும்பப்பெற வேண்டும்-அர்ஜூன் சம்பத்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் இந்து திருக்கோயில்களின் சொத்துக்களை அதனை ஆக்ரமித்தும், அனுபவித்தும் வருபவர்களுக்கே பெயர் மாற்றித்தரும் முறையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அரசானையை திரும்பப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழக அரசின் அரசானை எண்.G.O.No.318/30.08.2019 இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்து திருக்கோயில்கள், மற்றும் திருமடங்களின் சொத்துக்கள், விவசாய விலை நிலங்கள், கட்டிடங்கள், காலி மனைகள் ஆகியவற்றை நீண்டகாலம் யார் அனுபவித்து வருகின்றார்களோ அவர்களுக்கே பகிர்ந்து கொடுத்தல் அல்லது பெயர் மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுக்கும் வண்ணம் அரசாணை அமைந்துள்ளது. இது கோயில் சொத்துக்களை ஆக்ரமிப்பாளர்களுக்கே தாரை வார்த்துக் கொடுக்கும் முயற்சியாகும்.
ஏற்கனவே பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்து திருக்கோயில்களின் சொத்துக்கள், நிலங்கள் ஆகியவை பல இடங்களில் அக்ரமிக்கப்பட்டு உள்ளன. சுவாமி பெயரில் உள்ள சொத்துக்களை பட்டா மாறுதல் செய்ய முடியாது. ஆனால் நீண்ட கால குத்தகை, வாடகை அகியவற்றிற்கு விடமுடியும். ஏற்கனவே குத்தகை தாரர்கள் வாடகை தாரர்கள் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்பு மூலம் மோசடி ஆவனங்களை தயார் செய்து அபகரித்து உள்ளனர். தங்கள் பெயரில் உள்ள ஒப்பந்தங்களை நீட்டித்தும், அனுபவித்தும் வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு ஆக்ரமிப்பாளர்களுக்கே சாதகமாக அமையும்.

Picture For : IMK leader #ArjunSampath Reporting to CM

மேலும் இந்த உத்திரவு சட்ட விரோதமானது ஆகும். இந்த அரசானை ஆக்ரமிப்பாளர்களுக்கு சாதகமானது ஆகும். கோயில் சொத்துக்கள் கொள்ளை போவதற்கு காரணமாக இந்த உத்திரவு அமையும். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் இது விஷயத்தில் தலையிட்டு இந்த உத்திரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி இ.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கின்றோம். இந்து தமிழர்களின் கோயில் சொத்துக்களை பாதுகாத்திட நீதி வழங்கிட வேண்டுமென அர்ஜூன் கூறியுள்ளார்..

Comments are closed.