திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா
- September 30, 2019
- jananesan
- : 907
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.முன்னதாக மகா விஷ்ணுவின் வாகனமான கருடன் உருவம் வரையப்பட்ட மஞ்சள் வண்ண கொடி மலையப்ப சுவாமி தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் புடைசூழ, நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அர்ச்சகர்கள் வேத மத்திரங்கள் முழங்க கருடன் வரையப்பட்ட கொடி, தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ள விழாவில் அக்டோபர் மாதம் 1-ந்தேதி காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா நடைபெறுகிறது.
pictures for #tirupati
மேலும் 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, 4-ஆம் தேதி கருட சேவை உள்பட 7 ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் வீதியுலாக்கள் நடைபெறுகின்றன. 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானமும், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. வீதி உலா நிகழ்ச்சிகளின் போது, உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடனும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.