சாராயக் கடை திறக்க மட்டும் சட்டப் போராட்டம் நடத்திய தமிழக அரசு விநாயகருக்கு சதுர்த்திக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்.? இந்து மக்கள் கட்சி கேள்வி…? வீடியோ உள்ளே..!

அரசியல்தமிழகம்

கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் வீடுகளிலேயே கொண்டாடுமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. 

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது உள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் பிரதீப்குமார் என்ற கொக்கி குமார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில்:- சீனாவில் தொடங்கி தப்ளிக் கூட்டத்திற்கு சென்று வந்தவர்கள் மூலம் தமிழகத்தில் பரவிய கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று இன்றளவும் குறைவில்லாமல் பரவி வருகிறது அரசிற்கு மக்களும் அதற்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அதே சமயம் அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசு சாராயக்கடையை திறந்து சமூக விலகலை காற்றில் பறக்க விட்டு கொரோனா தொற்றை பரப்பி வருகிறது. ஆனால் கோவில்களை திறக்க விடாமல் பூட்டி வைத்துள்ளது. சர்ச் மசூதிகள் எந்த கட்டுப்பாடுமின்றி திறக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக வீதிகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் சிலை வைப்பதன் மூலமும் அரசுக்கு வருமானம் வரும். ஆனால் அரசு சாராயத்தின் மூலம் வரும் வருமானத்தை மட்டுமே விரும்பினால் வீதிகளில் சாராய பாட்டிலை வைத்து வழிபட அரசு அனுமதி தருமாறு வேண்டுகிறோம்… என்று குறிப்பிடப் பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave your comments here...