மதுரை மாணவனுக்கு தேசிய அளவிலான போட்டியில் மூன்று தங்கப்பதக்கம்..!

Scroll Down To Discover

கோவாவில் ஏப்ரல் 27 முதல் 29 வரை நடைபெற்ற 7வது தேசிய யூத் கேம்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2022 (7th National Youth Games Championship 2022) National Youth Sports And Education Federation (NYSAEF) சார்பில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். மதுரை கேரன் பள்ளியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் ஜெ.அதீஸ்ராம், சிலம்பம், வில்வித்தை, ஸ்கேட்டிங் ஆகிய மூன்று போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு தங்கம் பெற்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு NYSAEF தலைவர் ஹேமந்த் பவார், ராஜமகாகுரு ராமகிருஷ்ணன் ஆகியோர் பரிசளித்து பாராட்டினர்.