உலக பணக்காரர்கள் பட்டியல் – ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 6வது இடத்துக்கு முன்னேறினார்..!

Scroll Down To Discover

உலக பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, 6வது இடத்துக்கு முன்னேறினார்.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவில் கடந்த மூன்று மாதங்களாக அதிக அளவில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிலையை அடைந்து விட்டதாக முகேஷ் அம்பானி அறிவித்தார். மார்ச் 31, 2020க்குள் இந்த நிலையை அடைந்த திட்டமிட்டிருந்த நிலையில், முன்னதாகவே இலக்கை அடைந்து விட்டதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இதனையடுத்து கடந்த வாரம் முகேஷ் அம்பானி 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்தை பிடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது ஆல்ஃபாபெட் இணை நிறுவனர் லாரி பேஜை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்திய ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் அறிக்கையின்படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.44 லட்சம் கோடி) ஆக இருக்கிறது. குறிப்பாக அவர் சொத்து மதிப்பு கடந்த 22 நாட்களில் மட்டும் ரூ.7.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஜெப் பெசாஷ்(184 பில்லியன் டாலர்) உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அடுத்த இடத்தில் பில்கேட்ஸ் (115 பில்லியன் டாலர்) உள்ளார். 3வது இடம் பெர்னார்டு அர்னால்ட் (94.5 பில்லியன் டாலர்) 4,5வது இடம் முறையே பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்(90.8 பில்லியன் டாலர்), ஸ்டீவ் பால்மர் (74.6 பில்லியன் டாலர்) பிடித்துள்ளனர். 6வது இடத்தில் முகேஷ் அம்பானியும் (72.4 பில்லியன் டாலர்), 7வது இடத்தில் லாரி பேஜ்-ம் (71.6 பில்லியன் டாலர்), 8வது இடத்தில் வாரன் பபெட்டும் (69.7 பில்லியன் டாலர்) உள்ளனர்