Who-விற்கு நிதியை நிறுத்திய அமெரிக்க – 30 மில்லியன் டாலர் அள்ளி கொடுத்த சீனா – டிரம்ப் கூறியது உண்மை தானா..?

Scroll Down To Discover

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு உதவுவதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி வழங்கும் முதல் முக்கிய நாடான அமெரிக்கா கை விரித்த நிலையில், சீனா இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீன, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் இதுபற்றி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:ஏற்கனவே 20 மில்லியன் டொலர் உதவி வழங்கிய நிலையில், கூடுதலாக 30 மில்லியன் டொலர் வழங்கப்பட உள்ளது. இது வளரும் நாடுகளின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம், உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.சீனாவில் உருவான கொரோனா பரவியபோது, அந்த தீவிரத்தை உலக சுகாதார அமைப்பு மூடிமறைத்துவிட்டதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி இந்த நடவடிக்கையை அறிவித்தார்.அமெரிக்கா அதிக நிதி கொடுத்தபோதிலும், உலக சுகாதார அமைப்பு சீனா சார்பாக நடந்து கொண்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்கா ஆண்டுக்கு 400 மில்லியன் டொலர் முதல் 500 மில்லியன் டொலர் வரை WHO க்கு வழங்கியது.தற்போது இதனை பலரும் ட்ரம்ப் குற்றச்சாட்டில் உண்மையிருக்கலாமோ என்று, கேள்வி எழுப்புகிறார்கள்