தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பொருட்கள் பறிமுதல்…!

Scroll Down To Discover
Spread the love

தூத்துக்குடி மாவட்டம் நகர உட்கோட்டம் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார் இசக்கிமுத்து காவலர்கள் பழனி பாலமுருகன் பேச்சிராஜா ஆகியோர் திரேஸ்புரம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திரேஸ்புரம் கடற்கரையின் வடபுறம் உள்ள வாடையில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதிவு எண் இல்லாத டபுள் எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகில் ஏற்றிக் கொண்டிருந்த 42 மூட்டைகளில் இருந்த வாசனை சோப், 11,520 சாம்புகளை கடத்தல் கும்பல் போலீசாரை பார்த்ததும் அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

இதனையடுத்து அங்கு கிடந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள சோப்,சாம்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகையும் பறிமுதல் செய்தனர். கடத்தல் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து தெடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.