2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் காவலர் தற்கொலை..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரயில்வே பெண் காவலர் ஜெயலெட்சுமி. இவர் தனது கணவர் சுப்புராஜ் மற்றும் பவித்ரா (11), காளிமுத்து (9) ஆகிய இரு குழந்தைகளுடன் மதுரை திருப்பாலை பகுதியில் வசித்து வந்தார்.

மதுரை ரயில்வே போலீசில் பணிபுரிந்த ஜெயலட்சுமி, கடந்த 20 நாட்களாக தேனூரில் உள்ள தாய் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை, தேனூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.