திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி..!

Scroll Down To Discover
Spread the love

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில்ஆடிமாத உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூபாய் 24 லட்சத்து 34 ஆயிரத்து 380 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது தங்கம் 415 கிராம் கிடைத்தது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ஆடிமாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், திருக்கோவில் உதவி ஆணையாளர் ராமசாமி ,மற்றும் அலுவலர்கள் ஸ்கந்தகுரு வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ரூபாய் 24 லட்சத்து 34 ஆயிரத்து 350 ரூபாய் பணம் காணிக்கையாக கிடைத்தது. தங்கம் 115 கிராம், வெள்ளி ஆயிரத்து 650 கிராம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி : ரவிசந்திரன்